ஜனாதிபதி திரவுபதி முர்மு மிலாடி நபி வாழ்த்து மிலாடி நபி பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மிலாடி நபியாகக் கொண்டாடப்படும் முகமது நபியின் பிறந்தநாளில், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். யாகி சூறாவளி புயல் பாதித்த மியான்மர் நாட்டுக்கு இந்தியா நிவாரண உதவி தென்சீன கடலில் உருவான யாகி சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இதில் சிக்கி மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்த புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால், மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது. யாகி சூறாவளி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. குஜராத்: ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
Internet Radio