சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ரூ.167-க்கும்,விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென சீன மொழியில் ஊர் பெயர் இடம் பெற்றது. சமூக வலைதளவாசிகள் இதனை வீடியோ எடுத்து திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுவதாக கலாய்த்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிக்கான தீபத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பையை அறிமுகப்படுத்தினார்.

Adithya Tamil FM

Time played 00:00

REQUEST YOUR ADS

Ad Form Image